'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷ்ய்குமார் நடித்துள்ள 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா கடந்த மாதம் 27ம் தேதி துபாயில் புர்ஜ் அல் அராப் ஹோட்டலில் நடந்துது. இந்த விழாவில் ரஜினி, அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன், ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரமாண்ட அரங்கில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ளவே பல லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரகுமானும், ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா். நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தார்.
இந்த இசை நிகழ்ச்சியின் தொகுப்பு வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ குரூப் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.