ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மற்றம் நடிகை ரம்யா. இவரின் இன்னொரு முகம் பளு தூக்கும் வீராங்கணை. சில வருடங்களுக்கு முன்பு திருணம் செய்து கொண்ட ரம்யா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு தன் கவலைகளை மறக்க வேறு திசையில் பயணிக்க நினைத்தார். அதுதான் பளு தூக்குதல். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தேர்ந்த வீராங்கணை ஆனார். பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றார்.
சமீபத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள் இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் . என்கிறார் ரம்யா.