இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல நட்சத்திர தொகுப்பாளினி பரீனா ஆசாத். கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இண்டர்வியூ, சினிமா ஸ்பெஷல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலக்கி வந்தார். ஒரு மாதமாக அவரை காணவில்லை. எங்கே போனார் பரீனா என்ற தேடியதில் அம்மணி திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். தனது பேஸ்புக்கில் திருமண தகவல்களையும், படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.
அவர் திருமணம் செய்து கொண்டிருப்பது அவருடன் பணியாற்றிய நிகழ்ச்சி எடிட்டர் ரஹ்மானை. நீண்ட நாள் காதல் இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. அக்டோபர் 20ந் தேதி திருமணம் நடந்தது. இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் அர்ஜுன், ராஜ்கமல், லதாராவ், சுபாஷ், சுமையா, சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.