வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இறுதிச்சுற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா ஜீ தமிழ் சேனலுக்கான புரமோசன் குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சேனல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி உள்ளது. தனது லோகோவையும் மாற்றி உள்ளது.
இந்த மாற்றத்தை நேயர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் ஒரு நெகிழ்ச்சியான குறும்படத்தையே புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் ஜோதிகா, ஆரி, துளசி நடித்துள்ளனர்.
கிராமத்தை சேர்ந்த ஆரி, வட இந்திய பெண்ணான ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தமிழ் தெரியாத வட இந்திய பெண் என்பதால் துளசிக்கு ஜோதிகாவை பிடிக்காது. என்றாலும் கிராமத்திலிருந்து துளசியை நகரத்திற்கு அழைத்து வருகிறார் ஆரி. வந்த இடத்தில் ஜோதிகா துளசிக்கு பிடித்த மாதிரி மாறியிருக்கிறார்.
"நான் மாறிட்டேன் என்னை ஏத்துப்பீங்களா?" என்கிறார். இரண்டு நிமிடமே ஒடும் இந்த புரமோ வீடியோ ஜோதிகாவின் நடிப்பால் நெகிழ வைக்கிறது.