Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

என் நடிப்பு சிலருக்கு பிடிக்காததால் கலாய்க்கிறாங்க! :கீர்த்தி சுரேஷ்

20 அக், 2017 - 00:53 IST
எழுத்தின் அளவு:
என்-நடிப்பு-சிலருக்கு-பிடிக்காததால்-கலாய்க்கிறாங்க!-:கீர்த்தி-சுரேஷ்

உன் மேல ஒரு கண்ணு... என, பாடிய கீர்த்தி மீது, கோடம்பாக்கமே கண்ணாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம், தெலுங்கு படங்களுக்கு தான், முக்கியத்துவம் தருகிறார் என்ற குற்றச்சாட்டுடன், அவரை சந்திக்க சென்றபோது, மனம் திறந்து பேசினார்.

தமிழ் ரசிகர்களை மறந்து விட்டீர்களா?




அப்படி எல்லாம் இல்லை; தெலுங்கில், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன், சண்டைகோழி - 2, விக்ரமுடன், சாமி - 2, தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் சாவித்ரி வாழ்க்கை வரலாறை சொல்லும் நடிகையர் திலகம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால், சென்னையில் தங்கும் நாட்கள் குறைந்துள்ளன, அவ்வளவு தான்.


சண்டைகோழி - 2, சாமி - 2 படங்கள் பற்றி?


லிங்குசாமி என்னிடம் கதை கூறியபோது, மீரா ஜாஸ்மின் நடித்த ரோலில், நம்மால் நடிக்க முடியுமா என பயந்தேன். இயக்குனர் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். இதில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். சாமி - 2 படத்தில், த்ரிஷாவுடன் நானும் நடிக்கிறேன். அந்நியன் படம் வந்தபோது, அதில், விக்ரம் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். இப்போது, அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது; இது, எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.


உங்க குடும்பமே, இப்போது சினிமாவில் பிசியாக இருக்கீங்க போலிருக்கிறதே?


ஆமாம்; இப்போது எங்கள் வீட்டில் ஒரே போட்டி தான். அப்பா, சுரேஷ், சமீபத்தில், திலீப் நடித்த மலையாள படத்தில், அரசியல் கட்சி தலைவராக நடித்திருந்தார். அவரது நடிப்பு, கேரளாவில் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால், பிசியான நடிகராகி விட்டார். என் பாட்டி சரோஜா, ரெமோ படத்தில் நடிச்சிருந்தாங்க; இப்போது, சாருஹாசனுடன் ஒரு படத்தில் நடிக்கிறாங்க. அக்கா ரேவதி, இயக்குனர் பிரியதர்ஷனின் நிமிர் படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். எதிர்காலத்தில், அக்கா, இயக்குனராகலாம்.


தெலுங்கு படங்களில், அதிகம் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்குமே...


கண்டிப்பாக, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். எத்தனை ஆண்டுகளானாலும், ஒருபோதும் கவர்ச்சிக்கு மாற மாட்டேன்.


உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்து...


மக்கள் ரசிக்கும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதற்காக, ரொம்ப மெனக்கெடுகிறேன். தொடரி படத்தில் என் நடிப்பு, சிலருக்கு பிடிக்கவில்லை, மீம்ஸ் போட்டு, பயங்கரமாக கலாய்த்தனர். அதெல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தேன். சமீபத்தில், என் உடல் எடை அதிகரித்து விட்டதாக விமர்சனம் வந்தது. இப்போது, கடுமையாக உடற்பயிற்சி செய்து, எடையை குறைத்து விட்டேன். அடுத்ததாக, என்ன விமர்சனம் வருமோ என, பயமாக இருக்கிறது.


சாவித்ரி ரோலில் நடிப்பது கொஞ்சம் சவாலாச்சே ?


கொஞ்சம் அல்ல, நிறையவே சவாலான விஷயம் அது. சாவித்ரி மேடம் ரோலில் நடிக்க, என்னை தேர்வு செய்த போது, அவங்க அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது.சிவாஜி சாருக்கு, சரி சமமாக நடித்து, பெயர் எடுத்தவங்க, அவங்க. சாவித்ரி போல நடிப்பது, சுலபமான விஷயம் இல்லை. அவரது மகள், விஜயசாமுண்டீஸ்வரி உட்பட, அனைவரும் எனக்கு கொடுத்த ஆதரவாலும், ஊக்கத்தாலும், தைரியம் வந்தது.அவர்கள் நடித்த, மாயாபஜார், திருவிளையாடல், பாசமலர் போன்ற பல படங்களை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் போட்டு பார்த்து வருகிறேன். அவங்க ரோலில் நடிப்பது, பெருமையாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in