‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வருகிற 29ந் தேதி ஆயுத பூஜை, 30ந் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 1ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் இந்த நாட்களில் புத்தம் புதிய படங்களை சிறப்பு திரைப்படங்களகா ஒளிபரப்ப சேனல்களிடடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் தசமியன்று விஜய் டி.வி சங்கிலி புங்கிலி கதவத் திற படத்தை ஒளிபரப்புகிறது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது இந்தப் படம். காமெடி கலந்த பேய் படம். ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ராதிகா, தம்பி ராமய்யா, இளவரசு, கோவை சரளா, தேவதர்ஷினி, கவுசல்யா, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஐக் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்திருந்தது.