பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கிய படம் காற்று வெளியிடை. மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். கார்த்தி, அதிதி ராவ், ஆர்ஜே.பாலாஜி, ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தாண்டு ஏப்பரல் 7ந் தேதி வெளிவந்த இந்தப் படம். நான்கே மாதங்களில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறது.
விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக காற்று வெளியிடை ஒளிபரப்பாகிறது. வருகிற 15ம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்று மாலை 3 மணிக்கு மணிரத்தினம் இன்னொரு படமான ஓகே கண்மணி ஒளிபரப்பாகிறது, துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம்.