விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன. அதோடு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் ஆபாசமாக உடையணிவதாக சொன்னவர்கள், இப்போது அவர்கள் ஆபாசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், பிக்பாஸில் இருந்தபோது ஜூலி, ஆர்த்திக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. அதனால் ஆர்த்தி பிக்பாஸில் இருந்து வெளியேறும்போது, ஆர்த்தி அக்கா பை என்று சொன்னபோது, நிறுத்தும்மா ரொம்ப நடிக்காதே என்று சொல்லிவிட்டு வெளியேறினார் ஆர்த்தி.
இந்தநிலையில் தற்போது வெளியில் வந்த பிறகும் அவர் பிக்பாஸில் இருந்த போது ஜூலி தன்னிடம் நடந்து கொண்டதையும், பிக்பாஸில் நடக்கும் விஷயங்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். ஆனால் இந்த சேதி விஜய் டிவி வட்டாரத்துக்கு சென்றதை அடுத்து அவரை கண்டித்துள்ளார்களாம். பிக்பாஸ் விதிகளின் படி போட்டியை விட்டு வெளியேறினால் கூட போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு யாரையும் விமர்சிக்க கூடாது, அங்கு நடந்தவற்றை பற்றி விவாதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம்.