விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
நடிகை சுஹாசினி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வீக்கெண்ட் வித் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது விஜய் டி.வி ஒளிபரப்பி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு போட்டியானதாகும். ஒவ்வொரு வாரமும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிக முக்கியமான செலிபிரிட்டிகளை அழைத்து வந்து அவர்களுடன் கலந்த பேசி டிடி நிகழ்ச்சிக்கு செம பைட் கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் இன்று அவர் ஏ.ஆர்.ரகுமானுடன் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி 60 நிமிடங்கள்தான். ஆனால் ரகுமான் நிகழ்ச்சி 90 நிமிடங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு முடிவடைகிறது. இதில் ஏ.ஆர்.ரகுமானுடனான அனுபவங்களை ஹரினி, ஸ்ரீனிவாஸ், உன்னி மேனன், விஜய் பிரகாஷ், ஹரிச்சரண், அர்ஜுன் ஷெட்டி உள்ளிட்ட பாடகர் மற்றும் பாடகிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். பாடலாசிரியர் பா.விஜய், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ரகுமாடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.