தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கும், காமெடி நிகழ்ச்சிகளுக்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது, கிங்ஸ் ஆப் காமெடி சீனியர், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது.
இந்த வரிசையில் இப்போது ஐசியு என்ற காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. அதாவது இன்டன்சிவ் காமெடி யூனிட் என்பது இதன் விரிவாக்கம். காமெடி வீடியோக்கள் தயாரித்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த புட்சட்னி என்ற நிறுவனம் இந்த காமெடி நிகழ்ச்சியை வழங்குகிறது.
விஜய் டி.வியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் இண்டோர் எனப்படும் அரங்கத்தின் உள்ளே நடத்தப்பட்டு வந்தது. இது ஸ்கெட் காமெடி என்ற வகையை சேர்ந்த நிகழ்ச்சி. அதாவது நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் உள்ள காமெடியை கொண்டு வரும் நிகழ்ச்சி.
ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, ஆபீஸ் போன்ற பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக அந்தந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தி தருகிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் கொண்டதாக இருக்கும் ஒரு மணி நேரத்தில் 6 காமெடிகள் இடம்பெறும். கடந்த 2ந் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.