'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
உலகம் முழுவதும் 2 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள படம் தங்கல். ஆமீர்கான், சாக்ஷி தன்வார், பாத்திமா சனா, சந்தியா மல்கோத்ரா, சுஹானி பட்னாகர் நடித்த இந்தப் படத்தை நிதேஷ் திவாரி இயக்கினார். பிரிதம் இசை அமைத்தார், சேது ஒளிப்பதிவு செய்தார். வால்ட் டிஷ்னி பிக்சர்ஸ், யூ டிவி ஆகியவற்றுடன் இணைந்து ஆமீர்கான் தயாரித்தார். 70 கோடியில் தயரான படம் இந்தியாவில் மட்டும் 600 கோடிக்கு மேல் வசூலித்தது சீனாவில் வசூலித்த ஆயிரம் கோடி உள்பட 2 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது.
திறமை இருந்தும் சாதிக்க முடியதா ஒரு மல்யுத்த வீரன், தன் பெண் குழந்தைகளை மல்யுத்தத்தில் எப்படி சாதிக்க வைக்கிறர் என்பதுதான் படம். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படம் வெளிவரும்போதே தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்புடன் ஓடியது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் வாங்கியுள்ளது. அந்த அடிப்படையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்கல் படத்தை தமிழில் ஒளிபரப்புகிறது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. அனேகமான ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.