தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஜெனிபர். கில்லி படத்தில் விஜய்யின் குறும்புக்கார தங்கையாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அது சரியாக வரவில்லை. அதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார். 10 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடிகையாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிப்பார். தற்பேது அவர் நடித்துள்ள கூட்டத்தில் ஒருவன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
கேளடி கண்மணி தொடரில் நடித்து வரும் ஜெனிபர் இது எப்படி இருக்கு, கபடி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதுதவிர ஜெனிபர் தற்போது வெட்டிங் பிரைடல் என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார். இது திருமணமாகப்போகும் மணமகளுக்கு ஆடை வடிவமைத்து தரும் நிறுவனம். பேஷன் டிசைனில் ஆர்வம் கொண்ட ஜெனிபர் தனக்கு தேவையான ஆடைகளை தானே டிசைன் செய்து வந்தார். பின்பு தோழிகளுக்கு செய்து கொடுக்க ஆரம்பித்தார். இப்போது அதனையே முழு நேர தொழிலாக மாற்றி விட்டார். தற்போது மட்டும் 100க்கும் மேற்பட்ட எக்ஸ்குளூசிவ் டிசைன்களை வைத்திருக்கிறாராம் ஜெனிபர்.