'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோ டான்ஸ் கில்லாடிகள். பல மாதமாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆடினார்கள். திரைப்பட பாடல்களுக்கு நிகரான அரங்க அமைப்புடன் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. வழக்கமான நிகழ்ச்சி போன்று இல்லாமல் நீரில் நனைந்தபடி, மிதந்தபடி அந்தரத்தில் தொங்கியபடி, காற்று, நெருப்பு, நீர் என அத்தனை சக்திகளையும் எதிர்த்து நடனம் ஆடினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் சினேகா, அம்பிகா, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தீபக்கும், அர்ச்சனாவும் தொகுத்து வழங்கினார்கள். இதன் இறுதிபோட்டிகள் அண்மையில் பிரமாண்டமாக நடந்தது. இதன் முதல் பகுதி கடந்த 27ந் தேதி ஒளிபரப்பானது. இதன் இறுதி பகுதி வருகிற ஜுன் 3ந் தேதி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் டான்சிங் கில்லாடிகள் டைட்டில் வென்ற புவி-ப்ரித்தா, 3வது பரிசு பெற்ற கார்த்திக்-தீக்ஷிதா, 2வது பரிசு பெற்ற வர்தா-ரம்யா ஆகியோர் திகைப்பூட்டும் நடனங்கள் இடம்பெறுகிறது. அதன் பிறகு பரிசளிப்பு விழா ஒளிபரப்பாகிறது.