'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
தமிழில் சூப்பர் சேலன்ஞ், நட்சத்திர கபடியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தியா. தற்போது மலையாள சேனலிலும் தொகுப்பாளினியாக பணியை தொடங்கியிருக்கிறார். திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலானாலும் வாரா வாரம் பறந்து வந்து நிகழ்ச்சியை நடத்திச் செல்கிறார்.
மலையாள சேனலில் யு அண்ட் மீ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழ் திரை நட்சத்திரங்களை மலையாளத்தில் பேட்டி எடுத்து ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. மலையாள சேனல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் படப்பிடிப்புகள் சென்னையிலேய நடப்பதால் எளிதாக நிகழ்ச்சியை நடத்த முடிகிறது என்கிறார் தியா. இந்த நிகழ்ச்சிக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சீரியலில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்த தியா சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.