Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சரியான புரிதல் இல்லாததே தற்கொலைகளுக்கு காரணமாகிறது : பிரியா

12 மே, 2017 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Misunderstanding-is-main-reason-for-suicide-says-Priya-prince

நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளர், மாப்பிள்ளை சீரியலில் நடிகை என இரண்டு முகங்களுடன் சின்னத்திரையில் பயணித்து வருபவர் பிரியா. வெள்ளித்திரையிலும் அவ்வப்போது சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டுபவர். இன்றைய அவசர உலகத்தில் புரிதல் என்பதே குறைந்து வருகிறது. இந்த மாதிரியான விசயங்களே தற்கொலை சம்பவங்களுக்கு காரணமாகிறது என்கிறார் அவர். இதுகுறித்து பிரியா மேலும் கூறுகையில்,


சீரியல்களில் புரட்சிகரமான வேடங்களில் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பிரச்சினை எதிர்கொள்ளும் வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது. காரணம், சாதாரண பெண்களுக்கும், சீரியலில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரியலையும், ரீலையும் ஒன்றாக மிக்ஸ் பண்ணக்கூடாது.


மேலும், கணவரோ, மனைவியோ சீரியலில் நடிக்கிறார் என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது இடத்தில் போகும்போது ரசிகர் ரசிகைகள் பேசுவார்கள். அப்போது தவறாக கருதக்கூடாது. அனைவருக்கும் தெரிந்த முகம் ஆன பிறகு எல்லாவற்றையும் பேலன்ஸ் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது அவசர உலகம். யாருக்குமே முகம் கொடுத்து பேச நேரமில்லை. எல்லோருமே அன்புக்காக ஏங்குகிறார்கள். காலையில் படப்பிடிப்புக்கு போகிறார்கள். ஸ்பாட்டில் போய் சாப்பிடுகிறார்கள். நடிக்கிறார்கள். இரவு வீட்டிற்கு வருகிறார்கள்.


முக்கியமாக நாம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே பிரச்சினைகள் உள்ளது. நானெல்லாம் காலையில ஒருவேளையாவது வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுதான் படப்பிடிப்புக்கு செல்வேன். இது இது நடந்தது என்று அப்போது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்வேன். அப்படி இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. அதேபோல் இரவு லேட்டாக வந்தாலும் படப்பிடிப்புக்கு போயிட்டு வர்றா என்று வீட்டில் இருப்பவர்கள் ஒரு மரியாதை கொடுத்தால் பிரச்சினை இல்லை.


மேலும், என்னதான் இதுகுறித்து நடிகர் நடிகைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்தாலும் அதை புரிந்து கொள்கிற மனநிலை வேண்டும். குழந்தைய வளர்க்கும்போதே பேசாமல் மொபைலை கொடுத்துதான் வளர்க்கிறோம். பிறகு எப்படி புரிதல் வரும். பொம்மையைப் பார்த்து வளரும் குழந்தையிடம் புரிந்துகொள்ள சொன்னால் எப்படி முடியும். விட்டுக்கொடுத்து செல்லவேண்டும், பொறுமை வேண்டும், புரிதல் வேண்டும். தூங்கும்போது ஒரு நிம்மதியான ஒரு உறக்கம் வேண்டும். திரும்பிப்பார்க்கும்போது நம்ம முதுகில் அழுக்கு இருக்கக்கூடாது. அப்போதுதான் நாம் பேச முடியும்.


குறிப்பாக, இந்த மாதிரி தற்கொலை செய்து கொள்பவர்கள் பெற்றோரை விட்டு விட்டு வருகிறார்கள். பெற்றோர் கேள்வி கேட்டால் இப்போது பிள்ளைங்களுக்கு பிடிப்பதில்லை. சகிப்புத்தன்மை, பொறுமை, புரிதல் எதுவுமே இல்லை. சாவுதான் ஒரே வழி என்று தவறாக முடிவெடுக்கிறார்கள். எந்த பிரச்சினை என்றாலும் எதிர்த்து போராடும் மனப்பக்குவத்தை பெறவேண்டும். பிரச்சினைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தாக உள்ளது.


மேலும், இன்றைக்கு தற்கொலை என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. மீடியாவினர் என்கிறபோது அதை பெரிய சுனாமி மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது போன்று தெரிகிறது என்கிறார் பிரியா.


Advertisement
அமித், ரக்ஷிதாவுக்கு விஜய் டெலிவிஷன் விருதுஅமித், ரக்ஷிதாவுக்கு விஜய் ... நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் நான் எப்போதுமே இயக்குனர்களின் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in