‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்தி சேனல்களில் பெரிய வெற்றியை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டி.வி நடத்துகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒரு வீட்டிற்குள் வெளி உலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியை நடத்துவதற்கான பிரமாண்ட வீடு ஷெட் சென்னை&பெங்களூர் ரோட்டில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் சுமார் ஒரு கோடி செலவில் அமைக்ப்பட்டு வருகிறது. திரைப்பட கலை இயக்குனர்கள் இந்த அரங்கத்தை அமைத்து வருகிறார்கள்.
இது தவிர நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளும், இரண்டு முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்த கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக விஜய் டி.வி. வட்டார செய்திகள் தெரிவிக்கிறது. நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு கோடி கணக்கில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனுக்கும் கோடிக் கணக்கில் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.