கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் டார்லிங் தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சித்ரா. பல ரியாலிட்டி ஷோக்களிலும் புகுந்து கலக்கி வருகிறார். கட்டுப்பான ராணுவ குடும்பத்திலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர். நன்றாக தமிழ் உச்சரிக்கத் தெரிந்த தொகுப்பாளினிகளில் ஒருவர்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனத்தில் பட்டைய கிளப்பியவர் விரைவில் பாடகி அவதாரம் எடுக்கிறார். விரைவில் ஒரு பிரபலமான இசை அமைப்பாளரின் இசையில் திரைப்பட பாடல் ஒன்றை பாட இருக்கிறார். சித்ராவின் இன்னொரு அடையாளம் கவுன்சிலிங் சித்ரா. எம்.எஸ்.சி சைக்காலஜி முடித்துள்ள சித்ரா. சக நடிகைகளுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் கவுன்சில் கொடுக்கிறார். என்ன பிரச்சினையாக இருந்தாலும் சித்ராவை நோக்கி ஓடுகிறார்கள் சின்னத்திரை கலைஞர்கள். சைக்காலஜியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்ற முனைப்புடனும் இருக்கிறார் சித்ரா.