மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அம்மா-மகள்களை வைத்து ஒரு எபிசோடு ஒளிபரப்பு செய்தனர். அதில், சில இளம் பெண்கள் தங்களது திருமணத்தின்போது இவ்வளவு நகை, கார், வீடு என பெற்றோர் செய்து தர வேண்டும் என்று காரசாரமாக பேசினர். அதற்கு சில அம்மாக்கள் தகுந்த பதிலடியும் கொடுத்தனர். அந்த விவாதம் தற்போது இணையதளங்களில் பெரிய விவாதமாகியிருக்கிறது.
முன்னதாக, மருத்துவர்கள், ஜோதிடர்கள், கல்வித்துறையினர் என பல்வேறு துறை களைச்சார்ந்தவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர்கள், அடுத்து சின்னத்திரை நடிகர் நடிகைகளை இந்த நிகழ்ச்சிக்குள் இழுக்கப் போகிறார்கள். அவர்களின் பார்வையில் நாட்டு நடப்புகளை விவாதிக்கப்போகிறார்களாம். அதனால் நன்றாக பேசக்கூடிய நடிகர் நடிகைகள் பட்டியலை தற்போது சேகரித்து வருகிறார்கள்.