இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இந்தப்படத்தில் வி.ஆர்.எஸ் வாங்கிய முன்னாள் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் மோகன்லால்.. விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடித்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது புதிய பட அறிவிப்பினை பற்றி வெளியிட்டுள்ளார் மோகன்லால்.. படத்தின் பெயர் 'ஒடியன்'..
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவமுள்ள ஸ்ரீகுமார் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.. கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் அவரது நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்..
புலி முருகன் படத்தின் கேமராமேன் ஷாஜி தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசியவிருதுபெற்ற வசனகர்த்தாவான ஹரிகிருஷ்ணன் இந்தப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். புலி முருகன் படத்தை விட அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.