இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமுத்திரக்கனி தமிழில் இயக்கி நடித்திருந்த படம், அப்பா. தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, நசாத் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் இப்போது மலையாளத்தில் ஆகாச மிட்டாயி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சமுத்திரக்கனி இயக்குகிறார். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். அவர் மனைவியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர் நடிக்கும் இரண்டாவது மலையாளப் படம் இது. ஏற்கனவே, கமலா என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இதுபற்றி அவர் கூறும்போது, சமுத்திரக்கனி இதில் நடிக்கக் கேட்டதும் உடனே சம்மதித்தேன். ஏனென்றால் அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஷூட்டிங் தொடங்குகிறது என்றார். வரலட்சுமி நடிக்க இருந்த கேரக்டரில் ஆஷா சர்த் நடிப்பதாக முதலில் கூறப்பட்டிருந்தது.