ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டிவியில் வெளியாகி வரும் தொடர் மாப்பிள்ளை. சரவணன் மீனாட்சியில் நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்துள்ள இந்த தொடரில், செகண்ட் லீடாக கமல்-ஜனனி நடிக்கிறார்கள். இந்த தொடரின் நூறாவது எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அண்ணன் தம்பி பாசம், நிச்சயதார்த்தம், இன்னொரு பக்கம் லவ், ரொமாண்டிக் என கலகலப்பு பிளஸ் கிளுகிளுப்பு என இந்த சீரியல் போய்க் கொண்டிருக்கிறது.
முக்கியமாக, செகண்ட் லீடாக நடிக்கும் கமல்-ஜனனி இருவரும் டீன்ஏஜ் ஆடியன்சை ஈர்த்திருக்கிறார்கள். காரணம், காதலர்களாக நடித்துவரும் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளில் கமல் பயந்து ஓடுவதும், ஜனனி அவரை துரத்தி துரத்தி முத்தம் கொடுப்பதும் கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி நடிகர் கமல் கூறுகையில், காதலிக்க ஆசையா என்பதை ல்தக்க சையா என்பார்கள். ஐ லவ் யூ என்பதை ஒன் போர் த்ரி என்று சொல்வார்கள். அதேபோல் இந்த சீரியலில் கொசுக்கடிக்குது சுருள் ஏத்தவா -என்றொரு டயலாக் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால், முத்தம் கொடுக்க வா என்று அர்த்தம். இதை அடிக்கடி நாயகி ரிப்பீட்டு செய்வார். இளவட்டங்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்த டயலாக் மாப்பிள்ளை சீரியலின் ஹைலைட்டாகி விட்டது.
குறிப்பாக, முத்தக்காட்சிகள்கூட காமெடியாக இருப்பதால் அனைவருமே ரசிக்கிறார்கள். இந்த சீரியலில் நானும், ஜனனியும் தோன்று காட்சிகள் என்றாலே எப்போது முத்தக்காட்சி வரும் என்று நேயர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அதேசமயம், சில நேயர்கள் இணையதளத்தில் என்னை கலாய்க்கிறார்கள். சினிமாவில் உள்ள கமல் நடிகைகளை இழுத்து பிடித்து உதட்டு முத்தம் கொடுப்பார். ஆனால் நீங்கள் காதலி முத்தம் கொடுக்க வருவதைப்பார்த்தாலே தெறித்து ஓடுகிறீர்களே என்கிறார்கள்.
மேலும், இந்த சீரியலில் இதுவரை எனது காதலியாக நடிக்கும் ஜனனி எனக்கு ஐந்து முறை முத்தம் கொடுத்திருக்கிறார். இன்னும் நிறைய கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் மாப்பிள்ளை சீரியல் கமல்.