Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரகசிய திருமணம் செய்யவில்லை: ஆனந்தி

16 மார்,2017 - 11:00 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் கலக்கியவர் ஆனந்தி. கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் ஒண், கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதுதவிர தாரை தப்பட்டை, பறந்து செல்லவா படங்களிலும் நடித்தார். இப்போது திடீரென தனது திருமண புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். "என்ன மேடம் திடீர், ரகசியதிருமணமா?" என்று கேட்டால் மறுக்கிறார். அவர் கூறியதாவது:


திடீர் திருமணமும் இல்லை. ரகசிய திருமணமும் இல்லை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். நானும் உங்க விருப்பம் மாப்பிள்ளை பாருங்க என்று கூறியிருந்தேன். பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்தவர் தான் அஜய். பிசினஸ்மேன், சென்னைதான் சொந்த ஊர். ஆனால் பூர்வீகம் ஆந்திரா. அவரோட உறவுக்காரங்க ஆந்திராவில் இருக்கிறார்கள். அதனால் ஆந்திராவில் எளிமையாக கல்யாணம் நடந்தது. இதைத்தான் ரகசிய திருமணம் என்கிறார்கள்.


சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. என்னோட பிரண்ட்ஸ், சக கலைஞர்கள் கலந்துக்கிட்டாங்க. அடுத்த வாரம் கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதில் என்னோட உறவுக்காரர்கள் கலந்துக்குவாங்க. நிச்சயதார்த்தம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகுதான் கல்யாணம் நடந்தது. இந்த ஒரு மாதம் காதலித்துக் கொண்டோம். திருமணத்துக்கு பிறகு சின்னத்திரை, பெரிய திரையில் தொடர்ந்து எனது பயணம் இருக்கும். அதற்கு அவர் முழு அனுமதி கொடுத்திருக்கிறார். என்கிறார் ஆனந்தி.


Advertisement
சந்திரகாந்தாவை கைப்பற்றுவது யார்? சேனல்களுக்கிடையே போட்டிசந்திரகாந்தாவை கைப்பற்றுவது யார்? ... ஒருவரை அழ வச்சிடலாம், ஆனால் சிரிக்க வைப்பது கஷ்டம்! -நடிகர் கெளசிக் ஒருவரை அழ வச்சிடலாம், ஆனால் சிரிக்க ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thupparivaalan
    • துப்பறிவாளன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிஷ்கின்
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in