Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

என் மனைவியிடமிருந்து நடிப்பு கற்றுக்கொள்கிறேன்! -மிர்ச்சி செந்தில் பேட்டி

15 மார், 2017 - 09:01 IST
எழுத்தின் அளவு:
i-learn-acting-from-my-wife-srija-says-senthil

சரவணன் மீனாட்சியைத் தொடர்ந்து மீண்டும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து மாப்பிள்ளை சீரியலில் நடித்து வரும் மிர்ச்சி செந்தில், என் மனைவி என்னைவிட சீனியர். நல்ல நடிகை. அவங்க நடிப்பை நான் மதிப்பேன். அவங்களிடம் இருந்து நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்கிறார் அவர். தினமலர் இணையதளத்திற்காக மிர்ச்சி செந்தில் அளித்த பேட்டி...


மாப்பிள்ளை சீரியல் ரீச் எப்படி?


வழக்கமான ஆடியன்சும் பார்க்கிறார்கள். புதிய ஆடியன்சும் பார்க்கிறார்கள். பசங்க, லேடீஸ் என அனைவருமே பார்க்கிறார்கள். ஐடி போன்ற ஒர்க்கில் இருப்பவர்கள் ஆன்லைனில் பார்க்கிறாங்க. ரெகுலர் ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் இந்த மாதிரி நபர்களும் சீரியல் பார்ப்பது என்கிரேஜிங்காக உள்ளது. சரவணன் மீனாட்சி ரீச்சை மாப்பிள்ளை சீரியல் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. இந்த சீரியல் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. சரவணன் மீனாட்சி பாதிப்பில் இருந்து இன்னும் நிறையபேர் மீளவில்லை. ஆனால் பழைய ரீச்சை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம்.


காதலர்களாக இருந்த நீங்கள் இப்போது தம்பதிகளாகி நடித்து வருகிறீர்கள்? இந்த அனுபவம் பற்றி?


ரெண்டு பேருமே ஒரே துறையில் இருப்பது பயனாக உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் என் மனைவி ஸ்ரீஜாவும் இருப்பது எனக்கு சப்போட். நான் இருப்பது அவர்களுக்கு சப்போட். நான் ஏதாவது தப்பு செய்தால் பக்கத்திலே இருந்து பைட் பண்ணுவார்கள். எல்லாவகையிலும் உதவியாகவே உள்ளது. மொத்ததில் இப்போது ரொம்ப கண்டிசனாக உள்ளார்கள்.


திரைப்படங்களில் நடிக்கிறீர்களா?


படங்கள் பண்ண நேரமில்லை. சீரியலே முழுநேரமாக உள்ளது. ரேடியோ வேலையும் போய்க்கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை சினிமா, சீரியல் ரேடியோ என மூன்று துறைகளிலுமே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இன்றைக்கு இண்டர்நெட் என புது மீடியா வந்துள்ளது. அதில் ஏதேனும் நல்ல வாய்ப்பு வந்தால் அதிலும் பண்ணுவேன். இன்றைக்கு இருக்கிற கால கட்டத்துக்கு அது பண்ண மாட்டேன். இது பண்ண மாட்டேன் என சொன்னால் நமக்குத்தான் பாதிப்பு.


மாப்பிள்ளை சீரியல் சினிமாத்தனமான இருப்பதாக தெரிகிறதே?


இதில் கதை கம்மிதான். ட்ரீட்மென்ட்தான் அதிகம். ரெகுலர் சீரியல் மாதிரி எக்ஸ்ட்ரா ட்ராமா என்பது கம்மி. உணர்வுகள், உணர்ச்சிகள் ஒரு காதல், ஒரு அம்மாவோட ரிலேசன்ஷிப் என கதை செல்கிறது. அம்மா, பையனோட ரிலே ஷன் ஷிப்பை நிறைய சீரில்களில் பார்க்கிறோம். இது ட்ராமாவாக இல்லாமல் யதார்த்தமாக உள்ளது என்கிறார்கள். என்பையன் இப்படித்தான் என்னிடம் பேசுவான். மதிக்க மாட்டான். என்னையே கலாய்ப்பான். அதேமாதிரியே அம்மாவை மகன் கலாய்க்கிறான் என்கிறார்கள். முக்கியமா, எங்க அம்மாவுக்கே ரொம்ப பிடிச்சிருக்கு. நான் எப்படி இருக்கனும்னு நெனைக்கிறேனோ அப்படியே நடிக்கிறான் என்கிறார்கள். அதேபோல் கதையில் நடிக்கிற அம்மாவும் அப்படித்தான் சொல்கிறார்கள். என் பையனும் இப்படித்தான் இருக்கிறான் என்கிறார்கள். திட்டுவான், கலாய்ப்பான் என்கிறார்கள்.


மனைவியுடன் நடிப்பது மைனஸா இல்லை பிளஸா?


மனைவியுடன் நடிப்பது மைனஸ் இல்லை. மேலும், சில இடங்களில் ஏதோ ஒரு தப்பு நடந்தால், அந்த கோபத்தை என் மேலதான் காட்டுவார்கள். அதையும் நான் தங்கிக்கொள்வேன். ஆனாலும் எனக்கு காஸ்டியும், மேக்கப் என பக்கத்தில் இருந்து உதவி செய்வார். என் மனைவி என்னைவிட சீனியர். நல்ல நடிகை. அவங்க நடிப்பை நான் மதிப்பேன். அவங்களிடம் இருந்து நடிப்பு கற்றுக்கொள் கிறேன். என்னை விட என் மனைவி ஸ்ரீஜா நன்றாக நடிப்பதாக பலரும் சொல்கிறார்கள். அது எனக்கும் தெரியும்.


டைரக்சன் ஆசை?


டைரக்சன் ஆசை உள்ளது. அதை எங்கே ஆரம்பிப்பது என தெரியவில்லை. எனக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறான். நாம சொல்ல நினைக்கும் கருத்தை இயக்கும்போதுதான் சொல்ல முடியும். அது சினிமாவில் வெளிப்படுமா இல்லை யு-டியுப்பில் வெளிப்படுமா? என எனக்கு தெரியல. அதுக்கான ஆர்வம், விசயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியான சந்தர்ப்பதிற்காக காத்திருக்கிறேன் என்கிறார் மிர்ச்சி செந்தில்.


Advertisement
தொகுப்பாளினி காயத்ரி புவனேஷின் இன்னொரு முகம்!தொகுப்பாளினி காயத்ரி புவனேஷின் ... சந்திரகாந்தாவை கைப்பற்றுவது யார்? சேனல்களுக்கிடையே போட்டி சந்திரகாந்தாவை கைப்பற்றுவது யார்? ...


வாசகர் கருத்து (3)

Shanu - Mumbai,இந்தியா
15 மார், 2017 - 17:27 Report Abuse
Shanu headweight அதிகம்
Rate this:
sudhan -  ( Posted via: Dinamalar Android App )
15 மார், 2017 - 13:05 Report Abuse
sudhan sreeja &senthil is realy very good jode super
Rate this:
Raja - Chennai,இந்தியா
15 மார், 2017 - 09:41 Report Abuse
Raja செந்தில் & ஸ்ரீஜா ஜோடி காண்பதற்கு குளிர்ச்சி எந்த சினிமா ஜோடியிலும் நான் பார்க்காத கவர்ச்சி வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in