தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இந்தி தொடர் நாயகி - Actress Priyal gor impressed by tamil fans
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இந்தி தொடர் நாயகி

13 பிப், 2017 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Actress-Priyal-gor-impressed-by-tamil-fans

மும்பை மாடலாக தன் கேரியரை தொடர்ந்தவர் குஜராத்தைச் சேர்ந்த பிரியல் கோர். வெற்றிகரமான மாடலாக வலம் வந்தவர் 2010ம் ஆண்டில் இஷான் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது இந்தி சின்னத்திரை உலகின் முன்னணி நாயகி. இதுவரை 10 பிரமாண்ட தொடர்களில் நடித்தவர். தற்போது இச்சாபியாரி நாகினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜஸ்ட் யூ அண்ட் மீ என்ற பஞ்சாபி படத்திலும், சாபே சுப்ரமண்யம் என்ற தெலுங்கு படத்திலும், அனார்கலி என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.


தற்போது இவர் இந்தியில் நடித்து வரும் இச்சாபியார் நாகினி பாலிமர் தொலைக்காட்சியில் பிரியமுடன் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியல் கோர் நாகினியாக நடிக்கிறார்.


காமெடி மற்றும் திகில் கதையாக இந்த தொடர் நகர்கிறது. மந்திரவாதியும், நாகினியும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாகினியாக நடிக்கும் பிரியல்கோரின் அழகுக்கும், நடிப்புக்குமாகவே பெண்கள் டி.வி.முன் உட்காருகிறார்கள். விரைவில் தமிழ் சினிமாக்களிலும் பிரியல் கோரை பார்க்கலாம் என்கிறது சேனல் வட்டாரம்.


Advertisement
ஜுனியர் சீனியர்: கல்லூரி மாணவர்களுக்கான புதிய நிகழ்ச்சிஜுனியர் சீனியர்: கல்லூரி ... தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை


வாசகர் கருத்து (1)

mankatha madayan - pondy  ( Posted via: Dinamalar Android App )
13 பிப், 2017 - 10:24 Report Abuse
mankatha madayan enga thala(vali) mallu aunty kalin manathil neenga idam pidithar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in