ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர்-ஒன் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சினிமா பாடல்களுக்கேற்ப நடன கலைஞர்கள் நடனமாட, அதற்கு சில நீதிபதிகள் மதிப்பெண் வழங்குவது போன்று நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர், இளைஞிகளே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆனால், விரைவில் சிறுவர் சிறுமிகளை பெருமைப்படுத்தும் ஒரு ரவுண்ட் இந்த ஜோடி நம்பர்-ஒன் நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட உள்ளது. சிறுவர் - சிறுமிகள் நடனமாடும் இந்த நிகழ்ச்சியில் அவர்களின் பெற்றோரும் நடனமாடுகிறார்களாம். அதாவது, சம்பந்தப்பட்ட சிறுவனோ, சிறுமியோ ஒரு முழுப்பாடலுக்கும் நடனமாடுவார்களாம். அதையடுத்து தங்களது பெற்றோருடன் இணைந்து இன்னொரு பாடலுக்கும் நடனமாடுவார்களாம்.
இந்த புதுமையான ரவுண்டில் நடிகர் தாடி பாலாஜியின் மகள் போசிகா, ஐ எம்ய லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் -என சிறிய வயதில் சிம்பு நடித்த பாடலுக்கு நடனமாடுகிறார். அதையடுத்து தனது பெற்றோருடன் இணைந்தும் ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறாராம் போசிகா. விரைவில் இந்த புதுமையான ரவுண்ட் ஒளிபரப்பாக உள்ளது.