ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயாசிங். பல தமிழ் படங்களில் நடித்தவர் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், போஜ்புரி படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்ப்புகள் குறையவே சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். சரோஜினி, பிரே கதகளு என்ற கன்னட தொடர்களிலும், காஞ்சனா கங்கா என்ற தெலுங்கு தொடரிலும் நடித்தார். தமிழில் நாகம்மா என்ற தொடரில் நடித்தார்.
தற்போது சின்னத்திரையை விட்டு விலகி மீண்டும் படங்களில் குணசித்தர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இது கதிர்வேலன் காதல் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் சின்ன இடைவெளிக்கு பிறகு இப்போது உள்குத்து, பட்டினப்பாக்கம், பவர்பாண்டி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்