ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் அதிகப்படியான நேயர்களை கவர்ந்துள்ளது. இதில் அமித் அர்ஜூன் என்ற கேரக்டரிலும், பிரியா பவானிஷங்கர் பிரியா என்ற கேரக்டரிலும் கணவன்-மனைவியாக நடித்து வருகின்றனர். இவர்களில் பிரியாவாக நடிக்கும் பிரியா பவானி ஷங்கர்க்கு ஏராளமான நேயர்கள் உள்ளனர். அவருக்காகவே அந்த சீரியலை பார்ப்பவர்களும் உண்டு.
ஆனால் தற்போது சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த சீரியலில் இருந்து பிரியா பவானி ஷங்கர் என்கிற பிரியா விலகியதால், அவருக்குப்பதிலாக வேறொரு நடிகை அந்த கதாபாத்திரத்தை தொடருகிறார். பிரியா பவானி ஷங்கர் எதற்காக விலகுகிறார்? என்பது பற்றி விசாரித்தபோது, அவருக்கு கல்யாண ராசி வந்து விட்டதால் விரைவில் திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவெடுத்து விட்டார்களாம். அதனால்தான் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நேயர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.