Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குழந்தைகள் நிகழ்ச்சிகள் வயதுக்கு மீறிய எண்ணங்களை விதைக்கிறதா?: குவியும் புகார்கள்

16 நவ, 2016 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Is-children-program-are-going-too-much-in-television

கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலுமே குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த நிகழ்ச்சியும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் விதமாகவோ, குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை விதைக்கும் விதமாகவோ இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.


ஒரு சேனலில் குழந்தைகளை உட்கார வைத்து கேள்வி கேட்கிறார் தொகுப்பாளர். எதிரே பெற்றோர்கள் அமர்ந்திருக்கிறார்கள். "உங்க அப்பாவுக்கு அம்மா மேல கோபம் வந்தா எதைக் கொண்டு அடிப்பாரு?" என்று கேட்கிறார் தொகுப்பாளர். "செருப்பாலேயே அடிப்பாரு" என்கிறது குழந்தை, அதை கேட்டு பெற்றவர்கள் சிரிக்கிறார்கள். "உங்க அம்மாவுக்கு பொருத்தமான ஜோடி அஜீத்தா, விஜய்யா?" என்று கேட்கிறார் தொகுப்பாளர் "அஜீத் ஓகே" என்கிறது குழந்தை. இப்படித்தான் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. சில குழந்தைகள் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார்கள். அல்லது அப்படி பேச பயிற்சி கொடுக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள்.


இன்னொரு சேனலில் குழந்தைகள் நடிப்பு போட்டியாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலும் திரைப்பட காட்சிகளையே அவர்கள் நடித்துக் காட்டுகிறார்கள். பருத்தி வீரன் கார்த்தியையும், முத்தழகையும் மேடையில் கொண்டு வருகிறார்கள். சில சிறுவர்கள் கணவன், மனைவியாக நடித்து மேடையிலேயே சண்டை போடுகிறார்கள். இப்படி தங்களின் வயதுக்கு மீறிய உணர்வுகளை நடிப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துகிறார்கள். அதை கைதட்டி ரசிக்கிறார்கள் பெற்றோர்கள்.


குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்பட பாடல்களுக்குதான். பெரியவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களாக இல்லாமல் அதீத உணர்வுகளுடன் ஆடுகிறார்கள். கொஞ்சம் பரவாயில்லை என்றால் அது பாடல் நிகழ்ச்சிதான். ஒரு போட்டியில் வெற்றி தோல்வி சகஜம்தான். இருந்தாலும் தோற்பவர்களின் கண்ணீரையும், வேதனையையும் பதிவு செய்து ஒளிபரப்பி அந்த குழந்தையின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்துகிறார்கள்.


டில்லியில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி கண்காணிப்பு வாரியத்துக்கு இது தொடர்பான நிறைய புகார்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை வாரிய உறுப்பினர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தற்கொலைகள் தடுக்க சின்னத்திரை நடிகைகளுக்கு கவுன்சிலிங்: பொதுக்குழுவில் முடிவுதற்கொலைகள் தடுக்க சின்னத்திரை ... விஜய் டிவி நேயர்களுக்கு பிரியா கொடுத்த அதிர்ச்சி! விஜய் டிவி நேயர்களுக்கு பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

navasathishkumar - MADURAI,இந்தியா
16 நவ, 2016 - 14:09 Report Abuse
navasathishkumar இந்த மாதிரி வளரும் குழந்தைகளின் பெரும் பாராட்டு அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் முட்டு கட்டையாகி விடும் ...ஒரு குழந்தை நட்சத்திரம் கமல் ஹாசன் , ஸ்ரீதேவி மாதிரி குட்டி பதமினி , முருகன் வேஷத்தில் கலக்கிய சுதா , நகைச்சுவை வேஷத்தில் நடித்த காஜா செரிஃ பி இன்னும் பலர் அவர்கள் அளவிற்கு பணம் , புகழ் சம்பாதிக்க வில்லை. ஜீ டீவியில் நடிக்கும் குழந்தைகள் ஒரு படத்தில் வரும் காதல் , பிரிவு , இறப்பு , நகைச்சுவை அனைத்தையும் காட்டும் உணர்வுகள் அற்புதம்.ஆனால் இதை பார்க்கும் நமக்கு அந்த பிஞ்சு உள்ளங்கள் எப்படி உள்வாங்கி நடிக்கின்றனர், அவர்களின் மனதில் எப்படி கருத்துக்கள், வசனங்கள் பிரதிபலிக்கும் ..நிஜ வாழ்க்கையை இவர்கள் எப்படி எதிர்கொள்ள போகின்றார்கள் என்பது நிச்சயம் இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அலசி ஆராய வேண்டியது அவசியம் .. யானை, பாம்பு, குதிரை வைத்து படம் எடுத்தவர்கள் காசு பார்த்து விட்டார்கள். ஆனால் யானை, குதிரையை ,பாம்பை வளர்த்தவர்கள் எங்கே? அவர்களை போல இந்த சிறார்களின் பெற்றோர்கள் ஆகிவிட போகின்றார்கள் என்பது நிச்சயம் . கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரஜினி மாதிரி , அஜீத் , விஜய் , கமல் , விஜயகாந்த் போன்று பலரும் கலங்கினார்கள் , பாராட்டு , பரிசு பெற்றார்கள் அவர்கள் வயதிற்கு சரி ...ஆனால் அதே விஜய் டிவியில் நடத்திய நீயா நானாவில் பங்கு கொண்டு ஒருவர் சொன்னார் நான் சேலை விற்றுகொண்டே இந்த வேலையை செய்கிறேன் ...வடிவேலு போன்ற தோற்றம் கொண்டவர் வாழ்க்கையில் மிக சிரமம் எதிர்கொள்வதாக சொன்னது மனதை நெருடியது .. நடிப்பு நன்றாக வர இந்த சிறார்கள் படும் பாடு நிச்சயம் திரைக்கு முன்னாள் வராது ...பாட்டு அதை போல தான் ... சிறுவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் குரல் மாறும் அதற்க்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து மேடை ஏற்றி ஸ்.ஜானகி , பாலசுப்ரமணியம் , tms , உதித்நாராயணன் , உன்னிகிருஷ்ணன் ,சங்கர்மகாதேவன் பீ .சுசிலா போன்றவர்களின் குரலில் பாட வைத்தால் குருவி தலையில் பனங்காய் வைப்பது போன்று தான் இருக்கும் , திரை மறைவில் இந்த எபிசொட் நடத்தும் directors களின் படமாக்கும் விதத்தை எடுத்து ஒளி பரப்பட்டும் , அதை விட்டு விட்டு பங்கு பெறுபவர்களின் அழுகையை ஒளிபரப்பி , நடுவர்கள் காரணங்கள் சொல்லி ரிஜெக்ட் செய்வதை காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள் .. பொழுது போக்காக செய்ய வேண்டிய செயலை சிறார்களை professional ஆக்கி விளம்பரம் பிடிக்க ,தயாரிப்பாள ள் காசு பார்க்க நடத்தும் நிகழ்ச்சிகளை சிறார் அமைப்புகள் , அவர்களின் பெற்றோர்கள் கவனமுடன் கண்காணித்து , அறிவுசார் சமுதாயம் வளர உதவவேண்டும்.
Rate this:
sumo - chennai,இந்தியா
16 நவ, 2016 - 13:17 Report Abuse
sumo Better cancel these type of programs instead can give permission for quiz programs. Children can gain knowledge through those activities.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in