பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர் ஆனார். கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப். நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நேரடி தமிழ் படமான முடிஞ்சா இவனபுடி படம் வெளிவந்தது.
சுதீப் வெறும் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர். இந்த நிலையில் அவர் சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வார்சதாரா என்ற கன்னட சீரியலை தயாரிக்கிறார். இதனை கன்னட திரைப்பட இயக்குனர் கட்டாவிஜி இயக்குகிறார். இது ஜீ கன்னடா சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த சீரியில் விரைவில் ஒளிபரப்பை தொடங்குகிறது. இதுபோன்று இன்னும் பல சீரியல்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் சுதீப்.