'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
விஜய் டிவியின் நீயா - நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோபிநாத். அதோடு விஜய் டிவி நடத்தும் சினிமா விருது நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில சினிமா நிகழ்ச்சிகளிலும் கோபிநாத்தின் பங்களிப்பு தொடங்கியிருக்கிறது. ஆனால் விஜய் டிவியின் பெரும்பாலான சினிமா நிகழ்ச்சிகளில் திவ்யதர்ஷினிதான் பங்கேற்பது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், இப்போது இந்த தீபாவளியில் இருந்து சில சினிமா நிகழ்ச்சிகளில் கோபிநாத்தும் நடிகர் - நடிகைகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். அதோடு அடுத்தபடியாக சினிமா சம்பந்தப்பட்ட ஒரு தொடர் நிகழ்ச்சியையும் அவர் நடத்தப்போகிறாராம். இதன்காரணமாக, இதுவரை விஜய் டிவியின் சினிமா நிகழ்ச்சிகள் என்றாலே அதில் டிடிதான் பங்கேற்பார் என்றிருந்த நிலை மாறி, இப்போது கோபிநாத்தும் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்.