ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலகிருஷ்ணாவின் 100வது படமாக தயாராகும் கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை அனுகிய பாலகிருஷ்ணா அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமாரை கௌதமிபுத்ர சடர்கனி படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றார். சிவ்ராஜ்குமாரின் சிவலிங்கா படத்தின் 100வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகிருஷ்ணாவும் சிவ்ராஜ்குமாரும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றனர். இதனால் சிவ்ராஜ்குமார் கௌதமிபுத்ர சடர்கனி படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படம் என்பதால், இப்படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் க்ரிஷ்.