ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆயுத பூஜை தினமான வருகிற 10-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு புத்தம் புதிய திரைப்படமான ராஜா மந்திரியை ஒளிபரப்புகிறது. கடந்த ஜுன் மாதம் வெளிவந்த இந்தப் படம் 3 மாதங்களுக்குள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது.
உஷா கிருஷ்ணன் என்ற பெண் இயக்குனர் இயக்கி உள்ள இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்ததோடு அவரே ஒளிப்பதிவும் செய்திருந்தார். கலையரசன், காளி வெங்கட், ஷாலின் ஜோயா, விஷாலி, பால சரவணன் நடித்திருந்தார்கள். ஜஸ்டின் பிரகாகரன் இசை அமைத்திருந்தார். ஒற்றுமையாக வாழும் கிராமத்து அண்ணன் தம்பிகள் கதை. அண்ணன் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து தம்பி அண்ணனை எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. அண்ணனாக காளி வெங்கட்டும், தம்பியாக கலையரசனும் நடித்துள்ளனர். குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான தரமான படம்.