பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் படங்களில் கவர்ச்சி புயலாக வீசிக்கொண்டிருப்பவர் சன்னிலியோன். இவரது படங்களுக்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், இளைஞர் பட்டாளம் அவருக்கு முழுஆதரவு கொடுத்து வருவதால், படத்துக்குப்படம் வளர்ந்து கொண்டேயிருக்கிறார் சன்னி லியோன். மேலும், தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாடினார். ஆனால் அந்த பாடலும் ஹிட்டாகவில்லை. சன்னிலியோனின் ஆட்டமும் ரசிகர்களை கவரவில்லை. அதனால் அடுத்தபடியாக தமிழில் படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அதேபோல் அவர் நடித்த தெலுங்கு படங்களும் கைகொடுக்கவில்லை.
அதனால், தென்னிந்திய சினிமா கனவு கலைந்த நிலையில், பாலிவுட் சினிமாவை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள சன்னிலியோன், அங்குள்ள பிரபல நடிகைகள் சீரியல்களிலும் அவ்வப்போது முகம் காட்டுவதைப்போன்று தற்போது Bhabiji ghar par hain -என்ற மெகா சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். முக்கியமாக படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் சன்னிலியோன், இந்த சீரியலில் பக்கா குடும்பப் பெண்ணாக நடிக்கிறாராம். அதையடுத்து குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை சினிமா நிறை வேற்றவில்லை இப்போது சீரியல் நிறைவேற்றப்போகிறது என்றும் கூறியுள்ளார் சன்னிலியோன்.