திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட்டு நிகழ்ச்சியில் டாடியாக நடித்தவர் திண்டுக்கல் சரவணன். தற்போது ரகளை ராசி பலன் என்றொரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். அதோடு கட்டப்பாவை காணோம் என்ற படத்திலும் காமெடி ரோலில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட்டு எனக்கு பெரிய ரீச்சைக் கொடுத்தது. அதையடுத்து தற்போது ரகளை ராசி பலன் -என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். தினமும் ஒவ்வொரு ராசிகளின் பலன்களை காமெடியாக சொல்லும் நேரடி நிகழ்ச்சி இது. காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், சின்னத்திரை பயணம் தினம் தினம் ரகளையாக போய்க்கொண்டிருக்கிறது.
மேலும், சின்னத்திரையைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். உப்புக்கருவாடு உள்பட சில படங்களில் நடித்த நான், இப்போது சிபிராஜ் நடித் துள்ள கட்டப்பாவை காணோம் படத்திலும் நடித்துள்ளேன். காணாமல் போன கட்டப்பா என்ற மீனை கண்டுபிடிக்கும் வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் கடைசி வரை அந்த மீனை கண்டு பிடிக்கவே மாட்டேன். காமெடியான ரோல்.
அதோடு, ஏற்கனவே திரிஷா இல்லன்னா நயன்தாரா, 144 ஆகிய படங்களை ஒரு ஏரியாவுக்கு வாங்கி விநியோகம் செய்த நான், இந்த கட்டப்பாவை காணோம் படத்தையும் ஒரு ஏரியா வாங்கி வெளியிடுகிறேன். அதோடு, விஷால் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தை ஒரு ஏரியா வாங்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.