மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
மலையாளத்தில் சிறைச்சாலையை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சிறைச்சாலையின் இருட்டுப்பக்கங்களை காட்டுவதாகவே அமைந்திருக்கின்றன.. அதுமட்டுமல்ல, கைதிகளின் கோர முகங்களையும், பரிதாப முகங்களையும் தான் படமாக காட்டியுள்ளார்களே தவிர கைதிகளிடம் இருக்கும் பாஸிடிவான எண்ணங்களை இன்னும் அழுத்தமாக யாரும் படமாக்கியதில்லை என்கிறார் நடிகர் திலீப்.. ஆனால் தற்போது தான் நடித்துள்ள 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படம் கைதிகளின் கலகலப்பான பக்கத்தை காட்டும் விதமாக இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன்.
இதில் நீண்ட நாட்கள் சிறையில் காலத்தை கழிக்கின்ற ஒரு நல்ல கைதியாக திலீப் நடித்துள்ளாராம். இந்தப்படத்தை இயக்கும் சுந்தர்தாஸ் ஏற்கனவே திலீப்பை வைத்து சல்லாபம், குபேரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் தான். இருவருக்கும் இடையே பல வருடங்களுக்கு முன் மனக்கசப்பு ஏற்பட்டு விலகி இருந்தவர்கள், இப்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் ஹைலைட்டான விஷயம். இந்தப்படம் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகிறது.. 'சிங்காரவேலன்' படத்தை தொடர்ந்து இதில் இரண்டாம் முறையாக திலீப்புடன் ஜோடிசேர்ந்துள்ளார் வேதிகா.