'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த காளிதாசுக்கு தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. அதனால் அவர் பாலாஜி மோகன் இயக்கும் ஒரு பக்க கதை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் மீன் குழம்பும் மண்பானையும் படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது காளிதாஸ் தனது தாய்மொழியான மலையாளத்திலும் ஹீரோவாக அறிமுகமாகிறார். நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற படத்தின் இயக்குனர் அப்ரிஷ் ஷைன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். "எனது சொந்த மொழியில் நடிப்பது, அதுவும் ஷைன் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை பல விதமாக புகைப்படங்கள் எடுத்து பார்த்த பிறகே ஷைன் என்னை தேர்வு செய்தார். படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளிவரும். இப்போது நான் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன்" என்று தனது பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் காளிதாஸ்.