பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஜூனியர் என்.டி.ஆர், சமந்தா, நித்யா மேனன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், உன்னிமுகுந்தன் மற்றும் பலர் நடித்துள்ள ‛ஜனதா கேரேஜ்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(ஆகஸ்ட் 12) மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் டோலிவுட் பிரபலங்களான தில் ராஜூ, பிவிஎஸ்என் பிரசாத், பிவி பிரசாத், இயக்குனர் வம்சி, இயக்குனர் சுகுமார் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
ஜனதா கேரேஜ் படத்தின் டிரைலரை தில் ராஜூ வெளியிட அதனை பிவி பிரசாத் பெற்றுக் கொண்டார். இப்படத்தின் பாடல்களை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட இயக்குனர் கொரட்டாலா சிவா பெற்றுக் கொண்டார். மோகன்லால் மற்றும் சமந்தா இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
ஜூனியர் என்.டி.ஆர் நிகழ்ச்சியில் பேசும் போது, ஜனதா கேரேஜ் படத்தை செப்டம்பர் 2ல் வெளியிட திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். மேலும் படத்தின் வெளியீட்டின் போது கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது, ஆடு பலி இடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.