ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை நடிகராக வளர்ந்து தற்போது நாயகனாக பிசியாக நடித்து வரும் சுனில் ஜக்கன்னா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.
விழாவில் பேசிய சிரஞ்சீவி, எனது ரசிகனின் வெற்றியை காணும் போதும் பெருமிதமாக உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். சுனிலின் கடின உழைப்பும், விடாமுயற்சியுமே அவரை இந்த உயரத்திற்கு உயர்த்தியுள்ளது என சிரஞ்சீவி குறிப்பிட்டார். மேலும் சுனிலின் நடனமும் நகைச்சுவை கலந்த ஹீரோயிசமும் பாராட்டும் வகையில் உள்ளது எனக் கூறிய சிரஞ்சீவி ஜக்கன்னா வெற்றி பெற சுனில் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து பேசிய சுனில், சிரஞ்சீவி தான் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிட்டார். சிரஞ்சீவியின் நடனங்களைப் பார்த்தே தான் நடனமாட கற்றுக் கொண்டதாகவும் நாயகனாக உயர்ந்ததாகவும் சுனில் கூறினார். இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்கிய ஜக்கன்னா படத்தில் சுனில் மன்னாரா சோப்ராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.