அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
இது எப்படி கிளம்பியது என்றே தெரியவில்லை, ஆனால் மலையாள இண்டஸ்ட்ரியில் இந்த விஷயத்தைத்தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.. ஆம். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்பதுதான் அந்த ஹாட் நியூஸ்.. இருவரிடமும் இருந்து இதுகுறித்து இன்னும் துளிகூட அறிவிப்பு கசியாத நிலையில் இது உண்மையா என்று சிலரும், இது சாத்தியமா என்று சிலரும் விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் சமீபத்தில் மோகன்லாலை சந்திப்பதற்காக கொச்சிக்கு விசிட் அடித்து சென்றுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 'ஜில்லா' படத்தைப்போல சீனியர் கேரக்டரில் இல்லாமல் ரமணா போன்ற கெத்தான கேரக்டரில் மோகன்லாலை இயக்க இருக்கிறாராம் முருகதாஸ். மோகன்லாலுடன் 'மிஸ்டர் பிராட்' மற்றும் 'லோஹம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த அஸ்வின் மேத்யூ என்பவர்தான் இந்தப்படத்திற்கான கதையை எழுத இருக்கிறார் என்றும் உபரி தகவல் சொல்லப்படுகிறது. தற்போது மகேஷ்பாபு படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வரும் இந்த சூழலில் மேற்கூறிய செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் இது சாத்தியமா..? இந்த செய்தி உண்மையா என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. அப்படி உண்மையாக இருந்தால் ஒரு மெகா ஹிட் படத்தை காண நாம் தயாராக வேண்டியதுதான் பாக்கி.