மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பாலகிருஷ்ணாவின் 100வது படத்தின் துவக்க விழா கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் அமராவதியில் நடைபெற்றது. அமராவதியை ஆண்ட கௌதமிபுத்ர சாதகர்னி எனும் மன்னனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சாதகர்னி மன்னாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். இப்படத்தை தேசிய விருது வென்ற கஞ்சே பட இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு இன்று(மே 9) முதல் படப்பிடிப்புகளை துவக்கியுள்ளது. மொரோக்காவில் துவங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். சண்டை பயிற்சியாளர்கள் ராம் மற்றும் லக்ஷ்மனன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் ராஜிவ் ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.