இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். விஜய் சமந்தா நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜை வெகு விமர்சையாக அண்மையில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப கத்தி படத்தின் கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் சில மாற்றங்களை செய்து கொடுத்துள்ளாராம். இப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் விவி விநாயக் இப்படத்தில் இடம் பெறும் குத்தாட்ட பாடலுக்கு சிரஞ்சீவியுடன் ஆட நடிகை ரெஜினாவிற்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ராம் சரணுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.