ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உறவுகள் சங்கமம். சிவரகசியம், தென்றல், சுந்தர காண்டம் உள்பட பல தொடர்களில் நடித்தவர் நிலானி. இப்போது பிரியமானவள், பிரியசகி, என் இனிய தோழியே போன்ற தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சில நடிகைகளை ஒரே மாதிரியான வேடங்களுக்கே பயன்படுத்துவார்கள். ஆனால் என்னை அப்படியல்ல. பாசிட்டீவ், நெகடீவ், காமெடி என பலதரப்பட்ட வேடங்களுக்கு சின்னத்திரை டைரக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கிறது. இப்படி நான் பலவிதமான வேடங்களில் நடித்தபோதும், சுந்தரகாண்டம் தொடரில் நடித்த ஐபிஎஸ் வேடம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. வெளியில் பொறுப்புள்ள அதிகாரியாகவும், வீட்டிற்குள் பொறுப்புள்ள குடும்பத்தலைவியாகவும் இரண்டுவிதமாக நடித்தேன். அந்த தொடரில் நான் கொடுத்த பர்பாமென்ஸ் காரணமாக இப்போது இன்னொரு மெகா தொடரிலும் போலீஸ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
அதோடு, சீரியல்களைப் பொறுத்தவரை நல்லவர்களாக நடித்தால் யாருமே கண்டு கொள்வதில்லை. அப்படி நான் நடித்த கேரக்டர்கள் என்னை பெரிதாக பேசவைக்கவில்லை. ஆனால் வில்லியாக நடித்த வேடங்கள் என்னை பேச வைத்திருக்கிறது. அந்த ரீச் காரணமாகத்தான் டிவியில் எனக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது. மேலும், இப்போதைய குடும்பப் பெண்கள் என்னதான் விவரமாக இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், சீரியல்களில் நடப்பதை ஏதோ நிஜ சம்பவம் போன்றே நினைக்கிறார்கள். வெளியிடங்களில் சந்திக்கும்போது வில்லிகளை திட்டுகிறார்கள். அதேசமயம் சில பெண்கள் விவரமாகவும் இருக்கிறார்கள். சீரியலை சீரியலாக பார்க்கிறார்கள் என்று கூறும் நிலானி, ஒரே மாதிரியாக இல்லாமல் சேலஞ்சிங்கான டைட்டீல் வேடங்கள், மாற்றுத்திறனாளி வேடங்க ளில் நடிப்பதில் தனக்கு அதிக ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார்.