இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். இந்த தேர்தலில் சிவன் ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஒரு அணியினரும், பானு பிரகாஷ் தலைமையில் ஒரு அணியினரும், ரவிவர்மா தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். வாக்களிக்க தகுதியுள்ள 1340 பேரில் 705 பேர் ஓட்டளித்தனர். அதாவது 60 சதவிகித ஓட்டு பதிவானது.
ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கான ஓட்டு முதலில் எண்ணப்பட்டது. இதில் சிவன் ஸ்ரீனிவாஸ் 280 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவிவர்மா 207 ஓட்டுக்களும், பானுபிரகாஷ் 202 ஓட்டுகளும் பெற்றனர். இதனால் சிவன் ஸ்ரீனிவாஸ் 73 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி லியாகத்தலிகான் அறிவித்தார். மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.