600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்த்தி இப்போது வேந்தர் டி.வியில் மை டியர் குட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் சினிமாவில் போட்ட பிரபலமான வேஷங்களை போட்டு குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக படிக்காதவன் படத்தில் போட்ட அருக்காணி வேடம், சார்லி சாப்ளின் வேடம் உள்ளிட்ட பலவித வேடங்களை போட்டு குழந்தைகளை சிரிக்க வைக்கிறார்.
சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடிப்பு அனுபவம் பெற்றிருக்கும் ஆர்த்தி விரைவில் இயக்குநர் மற்றும் சினிமா தயாரிப்பாளராகிறார். தன் கணவர் கணேசுடன் இணைந்து ஒரு காமெடி படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்க இருக்கிறார். அவரே அதனை இயக்கவும் இருக்கிறார். இதற்காக ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியை முன்பே துவக்கி விட்டார்.