ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை தற்போது பிளாக் என்ற திகில் தொடரிலும் நடிக்கிறார். தினமும் நிஜமான பேய் பயத்தில்தான் நடித்து கொண்டிருக்கிறேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது...
தொகுப்பாளினியாக 6 ஆண்டுகள் ஆகிறது. மீடியா பக்கம் என்னை அனுப்பவே பயந்த குடும்பம் இப்போது சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலும் நான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அதனால்தான் சினிமா வாய்ப்புகள், வெளி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளை தவிர்த்து வந்திருக்கிறேன்.
ஒரு சேன்ஞ்சிற்காக பிளாக் தொடரில் நடிக்க ஆரம்பித்தேன். அது சவாலான தொடராக மாறிவிட்டது. தற்போது கொடைக்கானல் பகுதியில் உள்ள பேய் பங்களாக்களை தேடிப்பிடித்து படமாக்குகிறோம். பெரும்பாலான படப்பிடிப்பு இரவு நேரத்தில்தான் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஷாட் வைக்கும்போது நிஜமான பேய் பயத்துடன்தான் நடிக்கிறேன். நான் பயப்படும், அழும் காட்சிகளில் பெரும்பாலானவை நிஜமானதுதான்" என்கிறார் மணிமேகலை.