'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ரோஜா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஜீன்ஸ். சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஜாலியான போட்டி நிகழ்ச்சி. இதில் நான்கு சுற்றுகள் போட்டியிருக்கும். அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்படும். பரிசு பணத்தை முதலிலேயே டேபிளில் எடுத்து வைத்துவிட்டுத்தான் போட்டியை ஆரம்பிப்பார்கள். ஜெயிக்க ஜெயிக்க பணத்தை கொடுத்துவிடுவார்கள்.
இப்போது இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களுடன் ஜீன்ஸ் சீசன் 2வாக தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து முடிந்துள்ளது. இதன் புரமோ எபிசோடில் ரோஜாவும் அவரது மகளும் பங்கேற்பாளராக கலந்து கொண்டார்கள். வருகிற 18ந் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது. இதனை நடிகை ரோஜா மீண்டும் தொகுத்து வழங்குகிறார். ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.