'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
வீடியோ ஜாக்கிகள் எல்லாம் ரேடியோ ஜாக்கிகள் ஆகும் சீசன் போல... வீடியோ ஜாக்கி ரம்யா இப்போது ரேடியோ ஜாக்கியாவும் மாறிவிட்டார். அவர் வழியில் இப்போது அர்ச்சனாவும் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டார்.
ஒரு காலத்தில் இளமை புதுமை மூலம் இளசுகளை கட்டிப்போட்ட அர்ச்சனா ஒரு கட்டத்திலிருந்து சின்னத்திரையிலிருந்து விலகினார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது, ஜீ தமிழ் சேனலில் அதிர்ஷ்டலட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருகிறார். ஒரு காலத்தில் நடிக்க மறுத்தவர் தற்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது பிக் எஃப் எம்மில் ரேடியோ ஜாக்கியாகவும் ஆகிவிட்டார்.
"ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் வீடியோ ஜாக்கியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நான் இப்போது ஒரு அறையில் அமர்ந்து கொண்டு கோலிவுட் சூப்பர் டாப்-10 என்ற நிகழ்ச்சியை நடத்துகிறேன். இரண்டுமே தனித்தனி அனுபவங்கள் தான். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இனியாவின் அக்காவாக நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்" என்கிறார் அர்ச்சனா.