இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
மலையாள மெகாஸ்டார் மமுட்டி இருக்கிறாரே, அவர் லேசுப்பட்ட நபர் இல்லை.. இந்தியா முழுக்க உள்ள நடிகர் நடிகைகளை பற்றி அவர் விரல் நுனியில் வைத்திருப்பாராம். ஒரு சீரியலில் பத்து நிமிடம் வந்துபோகும் ஆர்ட்டிஸ்ட்டின் பெயரைக்கூட சரியாக சொல்லிவிடுவாராம். அதனால் தான் தன்னை வைத்து 'ஒயிட்' என்கிற படத்தை இயக்குவதற்காக கதைசொல்ல வந்த இயக்குனர் உதய் ஆனந்தனிடம், பாலிவுட் ஹிட் படமான 'கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்' நாயகியான ஹூமா குரேஷியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும்படி கூறிவிட்டாராம்..
பாலிவுட் நடிகையாச்சே என அவரிடம் கதை சொல்லப்போன உதய் ஆனந்தனுக்கு அங்கே போனதும் தான், நடிகை ஹூமா குரேஷி தமிழில் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்துவிட்டவர் என்பது தெரிய வந்ததாம்.. ஆனால் ஒருவித தயக்கத்துடனேயே உதய் சொன்ன கதை, ஹூமாவை அசத்தவே, மறுப்பேதும் சொல்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். படத்தின் கதை லண்டனில் நடக்கிறது. நடுத்தர வயதான மம்முட்டி லண்டனில் வசிக்கும் பில்லியனர். 25வயது இளம்பெண்ணான ஹூமா குரேஷி மேல் அவருக்கு காதல் வருகிறது.. இதைவைத்து கதையை உருவாக்கியுள்ளார் உதய் ஆனந்தன்.