ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. காமெடியை டார்கெட்டாக வைத்து வெளியான இந்த நிகழ்ச்சி பின்னர் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது அதே நிகழ்ச்சியை மறுபடியும் புதுமையான முறையில் நடத்தி வருகிறார்கள். பழைய காமெடியன்கள் யாரையும் இடம்பெறச் செய்யாமல் முற்றிலும் புதிய காமெடியன்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே நேயர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வந்து இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பின்தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளதாம். அதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இருந்தும் புதுப்புது காமெடியன்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து கொண்டிருப்பதால் கலக்கப்போவது யாரு இன்னும் பெரிய அளவில் கலக்கும் என்கிறது விஜய் டிவி வட்டாரம்.
அதோடு, ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டயமிங் காமெடி செய்த சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல காமெடியன்கள் அதன்பிறகு விஜய் டிவியின் மற்ற காமெடி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதைப் போன்று தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சயில் பங்குபெற்று வரும் புதிய காமெடியன்களும் அடுத்தபடியாக அவர்களது வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளார்களாம்.