பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஆதவன். தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆதவன் தற்போது இப்படி வருவோம்னு எதிர்பார்க்கலல்ல என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார். வித்தியாசமான இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பழைய திரைப்பட காட்சிகளில் ஏதாவது ஒரு கேரக்டரை நீக்கிவிட்டு அந்த கேரக்டருக்கு பதிலாக ஆதவன் நடிப்பார். புளூமெட் யுக்தியில், நவீன தொழில்நுட்பத்தில் இந்தக் காட்சி உருவாக்கப்படுகிறது. உதாரணத்திற்கு அருகில் உள்ள படத்தை கவனியுங்கள்... இந்தக் காட்சி தில்லு முல்லு படத்தில் இடம்பெற்றது. தேங்காய் சீனிவான் ரஜினியை தன் அலுவலகத்தில் இண்டர்வியூ செய்கிற காட்சி. இதில் ரஜினிக்கு பதில் அமர்ந்திருப்பவர் ஆதவன். தேங்காய் சீனிவாசனின் வசனங்களுக்கு ஏற்ப ஆதவன் காமெடியாக வசனம் பேசி இந்த காட்சி உருவாக்கப்படுகிறது.